விஜயகாந்த் மரணத்தில் மர்மம்?.. அஜித்தின் அரசியல் என்ட்ரி: பகீர் கிளப்பிய பிரேமம் பட இயக்குனரின் பதிவு..!
Author: Vignesh28 December 2023, 5:12 pm
நேரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பிரேமம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சரி நம் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்து விட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறி இருந்தார். இயக்குனர் அல்போன்ஸுக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக அவரே அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில், இப்போது அவர் இரண்டு பதிவுகளை பதிவிட்டு பகீர் கிளப்பியுள்ளார்.
அதாவது அவரது பதிவில், அஜித் சாருக்கான பதிவு நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலமாக நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக அறிந்தேன். இது பிரேமம் படத்திற்கு பிறகு நீங்கள் நிவின்பாலியை உங்கள் வீட்டிற்கு அழைத்து பேசியதற்கு பிறகு நடந்தது. ப்ரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பு அஜித்தின் மகளுக்கு பிடித்து இருந்ததால் அவரை வீட்டிற்கு அழைத்து அஜித் பேசினார். ஆனால், அதன் பிறகு உங்களை நான் பொது மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பார்க்கவே இல்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் அதை மறைத்திருக்க வேண்டும். அல்லது உங்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டு இருக்க வேண்டும். இந்த மூன்றும் இல்லை என்றால் நீங்கள் ஒரு கடிதம் மூலம் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நான் உங்களை நம்புகிறேன். அதேபோல பொதுமக்களும் உங்களை நம்புகிறார்கள் என தெரிவித்திருந்தார்.
இவருடைய அடுத்த பதிவில், உதயநிதி அண்ணாவிற்காக கேரளாவில் இருந்து வந்து ரெட்ஜெயிண்ட் அலுவலகத்தில் உங்களை சந்தித்து அரசியலுக்கு வரச் சொன்னேன். கலைஞர், இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிங்கள் என்று கேட்டேன். இன்று கேப்டன் விஜயகாந்தை கொலை செய்தது யார் என்பதை இப்போது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதை நீங்கள் புறக்கணித்தால், அவர்கள் ஏற்கனவே ஸ்டாலின் சார் மற்றும் கமல்சாரை இந்தியன் 2 படப்பிடிப்பில் கொலை செய் முயற்சி செய்திருக்கிறார்கள்.
இப்போது, அவர்களின் அடுத்த இலக்கு நீங்கள் அல்லது ஸ்டாலின் சாராக தான் இருக்கும். உங்களுக்கு நினைவிருக்கிறதா நேரம் படம் ஹிட் அடித்த சமயத்தில் நீங்கள் ஐபோனை எனக்கு பரிசளித்தீர்கள். உதயநிதி அண்ணா கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதும், அவர்களின் நோக்கமும் அதைவிட எளிமையானது என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.
#AlphonsePuthren’s recent two Instagram stories ? . He wants an investigation behind the deaths of Kalaignar, JJ, Vijayakanth. He also wants Ajith Kumar to enter into politics! pic.twitter.com/cSnhoZUABF
— Rajasekar (@sekartweets) December 28, 2023