மனைவி போட்ட முக்கிய கண்டிஷன்: புலம்பும் பிரேம்ஜி..ரொம்ப கஷ்டம் ப்ரோ..!
Author: Selvan5 December 2024, 9:05 pm
திருமணத்துக்குப் பிறகு மாறிய பிரேம்ஜி
தமிழ் சினிமாவில் பல பேர் திருமண வயதை தாண்டி ரொம்ப லேட்டாக கல்யாணம் பண்ணி வருகின்றனர்.அந்த வகையில் வெங்கட் பிரபுவின் தம்பியும்,நடிகருமான பிரேம்ஜி சில மாதங்களுக்கு முன்பு,சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடைய காதல் இன்ஸ்டாவில் மலர்ந்ததாக கூறப்படுகிறது.இவர்களுடைய திருமணம் ரொம்ப சிம்பிளாக திருத்தணியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது.
பிரேம்ஜி பெரும்பாலான நேரத்தை தன்னுடைய நண்பர்களுடன் பார்ட்டி செய்து வைப் பண்ணி வரும் ஒரு நபர்.தற்போது கல்யாணத்திற்கு பிறகு வீட்டில் சமையல் மற்றும் வீடு வேலைகளை செய்து வருவது போல் சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.மேலும் பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரில் ஒரு தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படியுங்க: பாலிவுட்டை கலக்க போகும் பகத் பாசில்…ஜோடியாக பிரபல நடிகை..!
இந்நிலையில் ஒரு தனியார் சேனலுக்கு பிரேம்ஜி பேட்டி அளித்துள்ளார் அதில் “திருமணம் ஆன பிறகு வாழ்க்கை நன்றாகத்தான் போகிறது.ஆனால் என்ன முன்னாடிபோல பார்ட்டி செய்ய முடியவில்லை எனவும்,அதற்கான அனுமதியை மனைவி கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.
முன்பெல்லாம் பயங்கரமாக பார்ட்டி செய்து நண்பர்களோடு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன். இப்போ இரவு 11 மணி-க்கு வீட்டுக்கு வரவில்லை என்றால் உடனே மனைவி ஃபோன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்” என்று ஜாலியாக பேசி இருப்பார்.