நடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
Author: Selvan26 December 2024, 5:10 pm
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியும்,நடிகருமான பிரேம்ஜி கல்யாணம் பண்ணாமல் சிங்கிள் தான் கெத்து என்று வைப் பண்ணிட்டு இருந்தார்.
பிரேம்ஜி மனைவியின் குடும்ப பின்னணி
இவர் கடைசி வர கல்யாணம் பண்ணிக்க போறதில்லை என பல தடவை கூறி இருக்கிறார்.ஆனால் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார்.இவருடைய திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மிக எளிமையாக நடைபெற்றது.
இவர் திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் ஜாலியாக இருப்பது போல் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இந்த சூழலில் இவருடைய மனைவியான இந்து தன்னுடைய குடும்பத்தை பற்றி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: கருக்கலைப்பு செய்த 2 ஆம் தாரமான நடிகை…கணவர் குடும்பத்தில் நெருக்கடி…விவாகரத்து பண்ண முடிவு.!
சேலத்தை பூர்விகமாக கொண்ட இந்து ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.இவரை விட பிரேம்ஜி வயதில் ரொம்ப மூத்தவர் என்பதால் இவருடைய திருமணத்திற்கு முதலில் இந்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்பு ஓரளவுக்கு சமாதானம் ஆகி பிரேம்ஜியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.ஆனால் இந்துவின் தம்பி இப்ப வரைக்கும் அவுங்க கூடயும்,பிரேம்ஜி கிட்டயும் பேசவில்லையாம்,இந்துவின் தம்பிக்கு இந்த கல்யாணத்திற்கு ஆரம்ப முதலே உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது,பல தடவை பிரேம்ஜி பேச ட்ரை பண்ணும் போது இந்துவின் தம்பி சரியாக ரெஸ்பான்ஸ் பண்ணவில்லை என்று இந்து ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
மேலும்,அவன் இப்போ தான் காலேஜ் படிக்கிறான்,ஒரு வயசு வந்தால் எங்களை பற்றி புரிஞ்சுப்பான் என்று பிரேம்ஜி மனைவியான இந்து கூறியிருப்பார்.