‘புஷ்பா’ படம் வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் இப்படத்தின் பாடல்களும், டயலாக்குகளும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் நடனமாடி வருகின்றனர்.
பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் புஷ்பா படத்தில் ஹிட்டான ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு அதன் ஹைலைட்டான ஸ்டெப்பை போட்டு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, விராட் கோலி, ஷாகிப் அல் ஹசன் போன்ற பல வீரர்கள் நடனமாடிய நிலையில் தற்போது இந்த ஸ்ரீவல்லி பாடலுக்கு பிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நடனமாடி ட்ரெண்டாகி இருக்கிறார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுடன் இணைந்து இப்பாடலுக்கு ஸ்டெப்பை போட்டுள்ளார்.