எங்களுக்குள்ள அது நடக்கவே இல்ல.. அதனால தான் பிரிஞ்சிட்டோம்.. முற்றுப்புள்ளி வைத்த பப்லுவின் காதலி..!

Author: Vignesh
18 March 2024, 12:51 pm

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.

babloo sheetal

இவர் நடன நிகழ்ச்சிகளில், கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில், பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர், மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு சில தினங்களுக்கு முன்னர் இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது. அதற்கு அவர் தெளிவில்லாத விளக்கத்துடன் பேட்டியும் கொடுத்திருந்தார்.

ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்து கணவர் பப்லுவை பிரிந்துவிட்டது போல் காட்டிக்கொண்டது தான் இந்த விவகாரம் பேசும்பொருளானது.

இந்நிலையில், இது குறித்த ஷீத்தல் தன் சமூக வலைதளத்தில் மிகவும் எமோஷனலாக பதிவு ஒன்றே பதிவிட்டுள்ளார். அதில் நாங்கள் இப்போது பிரிந்து விட்டோம். நாங்கள் சேர்ந்து இருந்தது மிகவும் அழகிய தருணம். தற்போது, பிரியும் நேரம் வந்துவிட்டது. அதனால், பிரிந்தோம் மேலும், எங்களுக்குள் திருமணம் ஆகவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனை கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. அதனால், எங்கள் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Babloo-Prithviraj
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ