ஒரு Night’க்கு ரூ. 1 லட்சம்… மனைவியுடன் உல்லாச வாழ்க்கை வாழும் பப்லு!

Author: Shree
16 May 2023, 4:09 pm

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.

இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.

இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.

இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது 56 வயதாகும் பப்லு கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்து இளமையாக தோன்றுகிறார்.

இந்நிலையில் இவர் தனது மனைவியுடன் உல்லாச வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ 5 நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி வருகிறாராம். அதில் வரவேற்பு அறை, அலங்கரிக்கப்பட்ட டைனிங் டேபிள், படுக்கை விரிப்புகள் என ஆடம்பர வசதிகளுடன் இருக்கும் அந்த ஹோட்டலில் ஒரு நாள் தங்க ரூ. 94 ஆயிரம் வாடகை. கட்டின மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க இவ்வளவு செலவு செய்கிறாரா பப்லு என ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர்,

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ