பிரபலங்களின் மறைவு – ரசிகர்களின் அணுகுமுறை
இயக்குநரும் நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘L2 – எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையும் படியுங்க: டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!
இந்த படத்தில் மோகன்லால்,பிருத்விராஜ் சுகுமாறன்,டொவினோ தாமஸ்,மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர், சாய்குமார், சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமர்ந்த ‘லூசிபர்’ படத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.இதனால் இந்தப் படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் குறித்துப் பிருத்விராஜ் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,தனது குழந்தைப் பருவ அனுபவங்கள் மற்றும் தனது தந்தை சுகுமாறனின் மறைவு தொடர்பான உணர்ச்சி மிகுந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது,”நான் ஒரு சாதாரண குழந்தையைப் போலவே வளர்ந்தவன். என்னுடைய பெற்றோர்கள்,அவர்கள் பெற்ற புகழின் தாக்கத்தை எங்களுக்கு உணர வைக்கவில்லை.என் குழந்தைப் பருவம் மிகவும் அழகாக இருந்தது.அதற்கு நான் என் பெற்றோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர்,”ஒரு பிரபலம் இறந்தால்,அவரது உடலை பொதுவெளியில் வைத்து மக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்,ஆனால்,அங்கு அவருடைய குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருப்பார்கள்,அந்த நேரத்தில், வேறு எந்த பிரபலமானவர் அங்கு வந்தாலும், அவருடைய ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள்,கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள்,அது எனக்குப் பிடிக்காது,” என்றார்.
“என்னுடைய அப்பா சுகுமாறன் இறந்தபோது,மோகன்லால் அங்கு வந்தார்,அவரைப் பார்த்து ரசிகர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள்,அந்த நேரத்தில் எனக்கு,என்னுடைய அப்பா இறந்து இருக்கிறார்,ஆனால்,இவர்கள் இங்கே இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது,அது எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது”என்று உருக்கமாக அந்த பேட்டியில் பகிர்ந்திருப்பார்.