இளம் காதலியுடன் வயசுக்கு மீறிய அலும்பு.. பப்லுவை பிரிந்த ஷீத்தல்? அவரே கொடுத்த ஹிண்ட்..!
Author: Vignesh1 December 2023, 9:35 am
பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார்.
இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார்.
இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார். இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான்.
இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது 56 வயதாகும் பப்லு கட்டுமஸ்தான தோற்றத்தை வைத்து இளமையாக தோன்றுகிறார்.
இந்நிலையில் இவர் தனது காதலியுடன் உல்லாச வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பப்லு பிரிதிவிராஜ் மற்றும் அவரது காதலி அடிக்கடி சோசியல் மீடியாவில் ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதனிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில், சீத்தல் மற்றும் பப்லு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேர்ந்து எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளனர். ஷீத்தல் வெளியிட்ட வீடியோவில் நெட்டிசன் ஒருவர், ஷீத்தல் – பப்லுபிரிந்துவிட்டனர் என்று பதிவிட்டு உள்ளார். அந்த பதிவிற்கு ஷீத்தல் லைக் போட்டுள்ளார். இந்நிலையில், சீத்தல் பப்லு இருவரும் உண்மையிலேயே பிரிந்து விட்டார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.