அந்த விஷயத்தை கேவலமா பண்ணுவாரு.. துருவ் விக்ரம் குறித்து பேசிய பிரியா ஆனந்த்..!
Author: Vignesh27 October 2023, 1:48 pm
வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா ஆனந்த் மற்றும் துருவ் விக்ரம் பேசுகையில் படத்தில் காதலியுடன் சண்டை போடுவது போன்று நிஜத்திலும் சண்டை போட்டு இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை.

அதனால், சண்டையும் வந்ததில்லை என்று தெரிவித்திருந்தார். உடனே பிரியா ஆனந்த் குறுக்கிட்டு துருவ் விக்ரம் காதலியுடன் சண்டை போட மாட்டார். கேவலமாக அயோக்கியத்தனமாக தான் சண்டை போடுவார் என்று கலாய்த்து பேசி இருக்கிறார்.