எந்த நேரத்துல என்ன மாதிரி கேள்வி கேக்குற.. பிரியா ஆனந்திடம் மோசமான கேள்வி கேட்ட ரிப்போர்ட்டர்..!(வீடியோ)

Author: Vignesh
17 August 2024, 5:59 pm

2009 ஆம் ஆண்டு வெளியான வாமனன் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். இவர் சமீபத்தில், லியோ படத்தில் நடித்திருந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பிரியா ஆனந்த் தற்போது, பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்தகன் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சிகயில் பிரியா ஆனந்தும் கலந்து கொண்டு பேசிய போது, இரண்டு நாட்களுக்கு முன் ஜிம் ஒர்க்கவுட் சொல்லிக் கொடுத்ததில், இப்போது வரை இடுப்பு வலிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பத்திரிக்கையாளர் ஒருவர் பிரியா ஆனந்திற்கு இடுப்பு வலி எடுத்ததை போல் பிரசாந்த் சார் உங்களுக்கு அப்படி இடுப்பு வலி வந்ததா என்று கேட்டதும் சில சமயத்தில் ஏன் தமிழ் தெரிந்தது என்று தோன்றுகிறது என்று பிரியா ஆனந்த் புலம்பி இருக்கிறார். இதனை கேட்டதும், தியாகராஜன் பொம்பளைங்க உடற்பயிற்சி செய்யும் போது இடுப்பு வலி வரும் ஆண்கள் செய்தால் வராது. உடல் வலி தான் இருக்குமே தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

பின் பேசிய பெசன்ட் ரவி, நீங்களும் வாங்க ஜிம் ஒர்க்கவுட் செய்யலாம் என்றும், எந்த நேரத்தில் என்ன கேள்வி கேட்கிறீர்கள் என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 209

    0

    0