முத்து மணிகள் கோர்த்த உடையில் அட்லீ மனைவி… விலை கேட்டால் ஆடி போயிடுவீங்க!

Author:
7 August 2024, 7:09 pm

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டிலே அவர் குடிப்பெயர்ந்து விட்டார் என்று சொல்லலாம். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

பாலிவுட்டின் பிரபலமான இளம் இயக்குனராக தற்போது அங்கு வலம் வந்து கொண்டிருக்கிறார். மாபெரும் வெற்றி கொடுத்து வசூல் சாதனை படைத்ததால் அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்கள் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மீண்டும் ஷாருக்கான் வைத்து ‘லயன்’ என்கிற திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவே ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ அம்பானி வீட்டு திருமணத்திற்கு அணிந்து சென்ற Rianta’s ESTELLE உடையின் விலை குறித்து தற்போதைய தகவல் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. முத்து மணிகள் கோர்த்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஆடையின் விலை ரூ. 229,950.00 என கூறப்படுகிறது. இது ஆடம்பரான இந்திய திருமண உடை வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டு இருக்கும் அட்லீயின் வளர்ச்சியை பார்த்து வாய் பிளந்து விட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!