சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் பேட்டி ஒன்றில் தனது காதல் பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார். அதாவது, காலேஜில் First year படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது. ஹாஸ்டலில் வாரதி இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என் காதலர் ஹாஸ்டல் உள்ளே காரில் வந்தார்.
நான் காரில் ஏறி வெளியில் சென்ற போது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொல்லி உள்ளே இருந்தவரை பார்த்து எங்க பையன் கூட போறன்னு கேட்டார். உடனே என்ன சொல்றதுன்னு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும், எங்கவேணாலும் போவேன், நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணி சொல்லுங்கன்னு கோபமா சொல்லிட்டு சென்றேன் பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.