சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் அந்த படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சர்ச்சை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். அதாவது, நடிகை சிம்ரன் மிகச்சிறந்த நடிகை. அவரிடம் இந்த ஒரு விஷயம் இல்லை என்று சொல்லவே முடியாது. முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை, முடி ஸ்டைட்னிங் செய்யவில்லை இது எதுவும் பண்ணாமல் தனது நேச்சுரல் அழகை கொண்டு நடிப்பு, நடனம் என தன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் சிம்ரன். அவர் ஹீரோயினாக மட்டுமின்றில் வில்லியாகவும் சிறப்பாக நடித்தார் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாரா , ஸ்ருதி ஹாசன் , சமந்தா என பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்கள் தான். ஒருவேளை சிம்ரனை நயன்தாராவுடன் ஒப்பிட்டு தான் பிரியா பவானி ஷங்கர் கிண்டல் செய்தாரோ? என நெட்டிசன்ஸ் சந்தேகித்துள்ளனர்.
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…
This website uses cookies.