காதலனுடன் அழகிய கல்யாணம்… பிரியா பவானி சங்கர் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

Author: Shree
17 November 2023, 8:25 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காதலன் ராஜவேலு உடன் தோழியின் கல்யாணத்திற்கு அழகாய் சேலை அணிந்து அலங்காரம் செய்துக்கொண்டு சென்றுள்ளார். அதே போன்று காதலனும் வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போன்று இருக்கிறார். இந்த ஜோடியின் அழகிய போட்டோக்களை பார்த்து உங்களுக்கு எப்போ கல்யாணம்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • sachein movie re release box office collection report சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?