“பிரியாபவானி ஷங்கரா இது..? நம்பவே முடியல..” –

Author: kavin kumar
10 February 2022, 8:44 pm

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவரது இளம் வயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ப்ரியாபவானி ஷங்கரா இது..? நம்பவே முடியல..” என்று குழம்பி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1514

    11

    4