பொது இடத்தில் இப்படி தான் பண்ணுவீங்களா?.. எல்லை மீறி காதலருடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்..!

Author: Vignesh
6 May 2023, 7:45 pm

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

priya bhavani shankar - updatenewse360

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது தனது காதலர் ராஜவேலுவுடன் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 388

    2

    0