பிரியா பவானி சங்கரின் திருமண வீடியோ..! வாழ்த்துகள் கூறிய ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்..!
Author: Vignesh16 டிசம்பர் 2022, 5:30 மணி
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலிருந்து இவர் அந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பொது இடங்களிலும், பட விழாக்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் மீடியாவுக்கு ஜோடியாக போஸ் கொடுப்பது கேலி கிண்டல் செய்வது என்று கலகலப்பாக இருக்கும் வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகிறது.
தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது தன் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். மேலும் தன்னுடைய அழகை மெருகேற்றும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருவதால் ஜிம் கோச் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கிறாராம்.
இந்த நிலையில், சமீபத்தில் காதலுடன் தன்னுடைய ஈசிஆர் புது பங்களாவில் குடிப்புகுந்துள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் என்று கூட செய்திகள் வெளியானது.
இந்நிலையில், அவர் நடிப்பில் மலையாளத்தில் கல்யாணம் காமநீயம் என்ற படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஓ மானசா என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
அதில் கதாநாயகனுக்கும் பிரியா பவானிக்கு திருமணமாகும் காட்சியை வைத்திருப்பதால் ரியலாக திருமணம் என்று சிலர் வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.
2
0