வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். இதனிடையே திடீரென பிரியா பவானி ஷங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால், அதெல்லாம் வதந்தி சமீபத்தில் வெளிநாட்டில் காதலனுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வெளியாகி வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரபல தனியார் யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ள பிரியா பவானி சங்கரிடம், கெட்ட வார்த்தை பேசியிருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் பேசியிருக்கிறேன் என கூறி பதிலளித்த அவர் , நான் நியூஸ் சேனலில் வேலைப்பார்த்துவிட்டு வீட்டுக்கு போகும்போது ஸ்கூட்டியில் சென்றிருக்கும் போது ஒரு ஆட்டோகாரர் என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் சிங்கமாக திட்டிவிட்டார். உடனே நான் வண்டியை நிப்பாட்டிவிட்டு நடுரோட்டில் கண்டபடி சண்டைபோட்டு அவரை மன்னிப்பு கேட்கவைத்தேன். அங்கு போலீஸ் எல்லாம் வந்து எங்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள் என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்:
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…
தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…
This website uses cookies.