சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால், அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி சிஷன்கர் ராஜவேல் என்ற நபரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். அவருடன் பங்களா வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். ஆனால், ராஜவேலுவை காதலிப்பதற்கு முன்னரே அவர் வேறொரு நபரை காதலித்துள்ளார்.
ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து ஒரே கூறியுள்ளார். அதாவது, ஆம், என்னுடைய பாஸ்ட் லைஃபில் நான் ஒரு மோசமான உறவில் இருந்தேன். அந்த நபரை நல்லவன் என்று நினைத்து நான் ஏமாந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் கஷ்டப்பட்டேன்.
பின்னர் இவனை நம்பி காலம் முழுதும் நம்மால் இருக்க முடியாது என நினைந்து அந்த காதலை அங்கேயே பிரேக் அப் செய்து கொண்டேன். அதன் பின்னர் எனக்கு கிடைத்தவர் ராஜவேலு. என்ணி போல் ராஜூவுக்கும் ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருந்தது. அந்த பெண் கூட என்னுடைய கல்லூரியில் தான் படித்தார். அவரை பிரிந்த பின்னர் என்னை சந்தித்தார் என பிரியா பவானி ஷங்கர் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.