Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

Author: Vignesh
15 May 2024, 12:00 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

priya bhavani shankar - updatenewse360

அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடு வாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்தார். தொடர்ந்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வருகின்றதை அடுத்து அண்மையில் பேட்டியில் பிரியா பவானி சங்கர் பேசிய விஷயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இது போல நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களால் பலர் பாதிக்கப்பட்டு நடிகைகள் அவர்களாகவே இந்த விஷயத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி இருப்பதோடு, அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

priya bhavani shankar - updatenewse360

அந்த வகையில், அண்மையில் பேட்டி அளித்த பிரியா பவானிசாங்கரிடம் வாய்ப்புக்காக உங்களை மிரட்டி படுக்கைக்கு அழைத்து உள்ளார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவர் சிரித்து அதற்கு உரிய விலையை கொடுத்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவில், அவர் தன்னிடம் இதுவரை யாரும் இப்படி வாய்ப்புக்காக முறை தவறி பேசியதோ நடந்து கொண்டதோ கிடையாது. நடிப்பு துறையை பொறுத்தவரை இது போன்ற அவலங்கள் உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

priya bhavani shankar - updatenewse360

ஆனால், என் விஷயத்தில் இப்படி யாரும் நடந்து கொண்டதில்லை. இதற்கு காரணம் நான் அனைவரிடத்திலும் நட்போடு பழகுவதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கக்கூடிய வகையில் தான் பழகு வருகிறேன். எனவே, எனக்கு இதுபோன்று மோசமான அனுபவம் இன்றுவரை ஏற்பட்டது இல்லை என்று வெளிப்படையாக பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து உள்ளனர். மேலும், திரைத்துறையில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் உண்மையாகவே உள்ளது என்கின்ற உண்மையை ஒத்துக் கொண்ட பிரியா பவானி சங்கரின் பேட்டியானது. தற்போது, இணையதளத்தின் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறி இருக்கிறது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 530

    0

    0