நம்ப முடியல…. அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்!

Author: Shree
23 March 2023, 7:01 pm

மீடியாவில் செய்திவாசிப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமாகி சின்னத்திரை தொடரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பின்னர் ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படம் மூலம் நடிகையாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

முதல் படமே ஹிட் அடித்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. அதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், மாபியா, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸுடன் ருத்ரன், கமலுடன் இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வெயிட்டிங்.

இந்நிலையில் தற்போது சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ம்,ணம் திறந்துள்ள பிரியா பவானி ஷங்கர், ” எனக்கு இதில் அனுபவம் இல்லை. உண்மையிலே நான் தொலைக்காட்சியில் பணியாற்றும் போது இருந்து தற்போது வரை யாரும் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததில்லை.

மீடியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் ஆனாலும், அந்த மாதிரி நடந்து கொண்டதில்லை. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை” ஆனால் அது எனக்கு நடக்கவில்லை என்று தான் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

இருந்தாலும் இதை நம்பாத ரசிகர்கள். வாரிசு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கே அட்ஜெஸ்ட் பிரச்சனை சந்தித்தாக கூறினார். அப்படி இருக்கும் போது சினிமா பேக்ரவுண்டே இல்லாத உங்களுக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என கூறுவது வாய்ப்பு கிடைக்காது என பயப்படுவது போல் உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்ஸ்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி