வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், எங்களுடைய நீண்ட நாள் கனவு நினைவாக மாறவிருக்கிறது. இதனை அறிவிப்பதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் நெருங்கிவிட்டது. எங்களுடைய சொந்த உணவகம். ஒரு உணவகம் நடத்த வேண்டும் என்று எங்களுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவை எங்களுடைய வாழ்க்கைக்கு எடுத்து வந்துள்ளோம். உங்களுக்கு உணவுகளை பரிமாற ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று கேப்ஷன் வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதற்கு ‘லியான்ஸ் டைனர்’ என்ற பெயரையும் வைத்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது, நடிகை பிரியா பவானி சங்கர் அவருடைய கணவரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரண்டை திறக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது. நடிகைகள் பலரும் சினிமா சம்பாதித்த பணத்தை முதலில் நிலத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது உணவகம் ஒன்றை திறந்துள்ளாரோ என ரசிகர்களை மகிழ்ச்சியாக வாழ்த்தி வருகின்றனர். ஆனால், மறுபக்கம் இது வெறும் படத்திற்கான விளம்பரமா..? அல்லது நிஜமாகவே இவர் ரெஸ்டாரன்ட் திறக்க இருக்கிறாரா..? என்று ஒரு குழப்பத்திலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.