கோடியில் புரளும் பிரியா பவானி ஷங்கர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Author: Shree
18 April 2023, 2:24 pm

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

priya bhavani shankar

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, இவருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரிடம், ரூ. 61 லட்சம் மதிப்புள்ள BMW X1 மற்றும் ஒரு condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த ருத்ரன் திரைப்படத்திற்கு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 733

    3

    2