நல்லா நிமிர்ந்து நடங்க…. வீடியோ வெளியிட்ட ரசிகர் – பிரியா பவானி ஷங்கரின் போல்டான பதில்!

Author:
17 August 2024, 12:04 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தை பார்த்த ப்ரியா பவானி சங்கர் ரசிகர் ஒருவர் “டிமாண்டி களனி 2 திரைப்படம் வெற்றி அடைந்து விட்டது. இனிமேல் நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம்” என கூறி பிரியா பவானி சங்கர் தன்னுடைய வெற்றியை கொண்டாடுவது போல் வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் “நான் எப்போதுமே தலை நிமிர்ந்து தான் சார் நடக்கிறேன்”இருந்தாலும் உங்களது அன்பிற்கு மிக்க நன்றி பதில் அளித்துள்ளார்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!