அந்த நடிகரை நம்பி ஏமாந்து போயிட்ட,… வாழ்க்கையை வெறுத்துட்டேன் : பகீர் கிளப்பிய பிரியா பவானி ஷங்கர்!
Author: Rajesh19 February 2023, 6:00 pm
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.
பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, அடுத்தடுத்து, பத்து தல, அகிலன், ருத்ரன், டிமான்டி காலனி 2, பொம்மை, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், ”நான் ஒரு சில காலகட்டத்தில் தப்பான ஒருவரை நம்பி இருக்கிறேன். அவருடைய வார்த்தைகளையும், பேச்சுக்களையும் நம்பிருக்கேன். அவருடைய பேச்சை கேட்டு தப்பான முடிவுகளையும் எடுத்திருக்கேன். சில நேரத்தில் நாம் சிலரை மிகவும் நம்புவோம். அதே போல தான் நானும் நம்பினேன். என்னிடம் உள்ள பலவீனம், ஒருவரை நம்பினால் மிகவும் நம்பிவிடுவேன். சில நாட்களில் என்னைக்காவது ஒரு நாள் நாம் உஷாராக இருந்திருக்கலாமோ என்று கூட தோணும்” என கூறியுள்ளார்.