ஒரு வருஷமா ஒருத்தனை சைட் அடிச்சேன்… காதலன் இருக்கும்போதே வேறொரு ஆணுக்கு ரூட் விட்ட நடிகை!

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்றுது. தற்ப்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரியா பவானி ஷங்கர்… நான் ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்யப்போன இடத்தில் ஒரு பையனை ஒரு வருஷமாக சைட் அடித்தேன். ஆனால், நான் அவருடன் பேசியதில்லை. அவரும் என்னுடன் பேசியதில்லை. அவர் மீது எனக்கு ஒரு கிரஷ் அவ்வளவு தான். அதன் பிறகு நான் வேறொரு ஜிம்மில் சேர்ந்துவிட்டேன். என கூறினார். இதை கேட்டதும் ரசிகர்கள் 10 வருஷமாக காதலன் கூடவே இருக்கும்போதே இப்படி அடுத்தவனை ஒரு வருஷமா சைட் அடிச்சிருக்கீங்களே இது நியாமா? என விமர்சித்துள்ளனர்.

கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, இவருக்கு ரூ. 6 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவரிடம், ரூ. 61 லட்சம் மதிப்புள்ள BMW X1 மற்றும் ஒரு condo கார் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த ருத்ரன் திரைப்படத்திற்கு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Ramya Shree

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

5 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

5 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

7 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

7 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

8 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

8 hours ago

This website uses cookies.