யார் கூட போட்டோ எடுத்தாலும் அவங்களோட போயிடுவேனா ? கொந்தளித்த பிரியா பவானி சங்கர்!

Author:
7 August 2024, 7:21 pm

தமிழ் சினிமாவில் செய்திவாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பிறகு சீரியல் நடிகையாக அறிமுகமானவர்தான் பிரியா பவானி சங்கர். கல்யாண முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமான இவருக்கு மேயாத மான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

priya bhavani shankar

2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே ,திருச்சிற்றம்பலம், பத்து தல, அகிலன், ருத்ரன், பொம்மை ,இந்தியன் 2 உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இவர் ராஜவேலு என்பவரை நீண்ட நாளாக காதலித்து வருகிறார். இவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னைக் குறித்து வரும் வதந்தி செய்திகளுக்கும் கிசுகிசு செய்திகளுக்கும் பதில் அளித்த பிரியா பவானி சங்கர், நான் ஹாப்பி பர்த்டே என்று சில நடிகர்களோடு சேர்ந்து ஏதேனும் போஸ்ட் போட்டாலே போதும் அந்த ஹீரோவுக்கும் எனக்கும் இதே காதல் என்று எழுதிட்டுறாங்க.

ஹரிஷ் கல்யாண் , அசோக் செல்வன் உடன் எடுத்த போட்டோவை போட்டதுக்கு அப்படி தான் பேசுனாங்க. நல்லவேளை அவங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு. நான் யாரோட போட்டோ எடுத்து போட்டாலும் உடனே அவங்களோட போயிடுவேன்னு எப்படித்தான் நினைக்கிறார்களோ… ரொம்ப மோசமா போடுறாங்க… மனசு தாங்கல… என்று மிகுந்த மன வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 226

    0

    0