மொத்த பழியும் என் மேலே போட்டுட்டாங்க… கதறி அழும் பிரியா பவானி ஷங்கர்!

Author:
8 August 2024, 9:20 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

priya bhavani shankar

இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் தற்போது டிமாண்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்று வரும் பிரியா பவானி ஷங்கரிடம் இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் நான் இதுவரை நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது இந்தியன் 2 திரைப்படம் தான் .

எப்போதுமே மக்கள் என்னை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. ஒரு படம் தோல்வி அடைந்து விட்டால் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையுமே… மொத்த குழுவையுமே அது பாதிக்கும். இந்தியன் 2 திரைப்படம் சரியாக ஓடவில்லை. எதிர்பார்த்ததை பூர்த்தி செய்யவில்லை என்றதும் எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள். அது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது.

இந்தியன் 2 திரைப்படம் உண்மையிலே தோல்வியடையும் என்று எனக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் கூட நிச்சயம் நான் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பேன். ஏனென்றால் கமல் சார்….சங்கர் சார் போன்ற பிரம்மாண்ட நட்சத்திரங்களுடன் சேர்ந்து இப்படி ஒரு படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்ததையே நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

எனவே எந்த ஒரு காரணத்திற்காகவும் நான் இந்த படத்தை கைவிட விரும்பவில்லை. எனது திரைப்படங்கள் வெற்றியடைந்தால் அதற்காக என்னை யாரும் பாராட்டுவதே கிடையாது. ஆனால் தோல்வியடைந்தால் மட்டும் என் மீது மொத்த பழியும் போட்டு விடுகிறார்கள் என பிரியா பவானிசாகர் மிகுந்த வேதனையோடு பேசி இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 209

    0

    0