அப்படி நடிப்பது ரொம்ப கஷ்டம்…. அவங்களுக்கு அது பிடிக்காது – பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்!

Author:
3 September 2024, 2:35 pm

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியா பவானி சங்கர். அதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

priya bhavani shankar

தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படம் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

இது அடுத்து கடைசியாக பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளிவந்திருக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு. பாராட்டுகள் குவிந்து வருகிறது.

priya bhavani shankar - updatenewse360

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிளாமர் ரோலில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர் கிளாமராக நடித்து விட்டால் சீக்கிரமே பெரிய ஹீரோயின் ஆக மாறிவிடலாம் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி நடிப்பது தான் உண்மையிலேயே ரொம்பவே கஷ்டம் .

சினிமாவில் கிளாமராக நடிப்பது தான் உண்மையிலே கஷ்டம். கிளாமர் ரோல் நடிக்கும் அளவுக்கு நான் இல்லை என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு திறமையோ தைரியமோ கிடையாது. இப்போது நடிப்பதே எனக்கு வசதியாக இருக்கிறது.

priya bhavani shankar

அதுமட்டும் இல்லாமல் என்னுடைய ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்க்க விரும்பவில்லை என நினைக்கிறேன். என்னுடைய வழக்கமான நடிப்பை தான் அவர்களும் விரும்புகிறார்கள் எனவே நான் எப்போதும் போலவே இது போன்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பேன் என பிரியா பவானி ஷங்கர் கூறினார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 345

    0

    0