விவாகரத்துக்கு கட்டாய படுத்துறாங்க.. டைவர்ஸ் ஆனவரை திருமணம் செய்த பிரியா மணி ஆவேசம்..!
Author: Vignesh29 June 2023, 1:45 pm
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் பிரியாமணி. அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட வழங்கப்பட்டது. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். இதனிடையே, பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு வெப்தொடர் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, பிரியாமணியின் கணவர் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்ததாகவும், இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், தன்னுடைய கணவரின் முதல் மனைவியால் பிரியாமணி விவாகரத்தை செய்யப்போகிறார் என்ற தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியாமணி தனக்கும் தன் கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. தன்னுடைய கணவர் விவாகரத்து செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வருவதாகவும், தன் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து இருப்பதாகவும், அது எல்லாம் பொய் என்றும், தான் தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பலர் நீங்கள் ஏன் உங்கள் மதத்தை விட்டு வெளியேறினீர்கள்? நீங்கள் வேறு மத நபரை திருமணம் செய்து உள்ளீர்களா? உங்கள் குழந்தை ஜிகாதிகளாக பிறப்பார்கள். இது லவ் ஜிகாத் என்றெல்லாம் விமர்சித்து இருந்தார்கள். தனக்கும் தன் கணவருக்கும் பிரச்சனை என்றெல்லாம் பேசினார்கள். தன்னுடைய கணவரை விவகாரத்தை செய்ய சொல்லி தன்னை கட்டாயப்படுத்தியும், தன்னுடைய திருமண வாழ்க்கை நன்றாக சந்தோஷமாக மகிழ்ச்சியாக செல்கிறது.
காதலித்தவரை திருமணம் செய்து கொள்வது தவறா? முஸ்தபா ராஜா வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதில் என்ன தவறு எல்லா முஸ்லிம்களும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இல்லை, எல்லோரும் லவ் ஜிகாத் இல்லை, கொஞ்சம் புத்திசாலித்தனமாக சிந்தித்துப் பேசுங்கள் என்று பேட்டியில், பிரியா மணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.