கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை பிரியாமணி 2004 ஆண்டு “கண்களால் கைது செய்” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு இவர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ” அது ஒரு கனாக்காலம் ” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
முதல் இரண்டு படத்திலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலம் ஆகவில்லை பின்பு 2007-ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது’ கொடுக்கப்பட்டது.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் , ராவணன் , சாருலதா போன்ற படங்கள் ப்ரியாமணிக்கு கைகொடுக்கவில்லை , நடிக்கும் படங்கள் அனைத்தும் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. பிரியாமணி முதல் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் “சாருலதா” அந்த படமும் தோல்வியில் முடிய தனது மார்க்கெட்டை இழந்தார்.
இதனால் தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத பிரியாமணி தெலுங்கில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்து நடித்தார். சில காலமாக ஒரு சில படங்களிலேயே நடித்த பிரியாமணி மலையாளப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . அதன் பின் இவர் நடித்த FAMILYMAN 2 Web Series முரண்பாடான விமர்சனங்கள் இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது .
இதனிடையே முஸ்தபா ராஜ் என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டும் நடித்து வருகிறார். அண்மையில் கோடா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் விஷயம் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது நடிகர், நடிகைகளை பொதுவெளியில் (Airport , ஜிம் , ஹோட்டல் ) உள்ளிட்ட இடங்களில் மடக்கி பிடித்து புகைப்படம் எடுக்கும் பத்திரிகையாளர்கள் அதை வைத்து பல லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் புகைப்படம் எடுக்கும் அந்த நபர்களுக்கு அவர்களது நிறுவனம் சார்பில் ஸ்பெஷல் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால் சில செலபிரிட்டிகள் தாங்களாகவே பணம் கொடுத்து விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள். இதை பற்றி நான் கேள்வி பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன் என பிரியாமணி கூறியிருக்கிறார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.