விக்கை கலாய்த்த VJ பிரியங்கா.. தலைவா விஜய்னு பார்த்தால் தலைவாசல் விஜய் மாதிரி இருக்கே..! (வீடியோ)
Author: Vignesh1 November 2023, 7:59 pm
நடிகர் விஜய் கமர்ஷியல் கிங்க்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடித்து உள்ளார். இவரின் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், லியோ திரைப்படமும் வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் 7 வருடத்திற்கு மேலாக படங்களில் விக் வைத்து தான் நடித்து வருவதாகவும், அவரது தந்தைக்கு வயசானாலும், அவருக்கு முடி உதிராமல் இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சின்னத்திரை தொகுப்பாளினியாக பிரபலமாகி பல லட்ச ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் விஜே பிரியங்கா. விஜய் டிவியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது, அவருடைய படத்தின் ஹீரோக்களின் கதாபாத்திரங்களில் விஜய் டிவியின் நகைச்சுவை நடிகர்கள் வேடமிட்டு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
அப்போது, தலைவா படத்தில் வரும் விஜய்யை போல கெட்டப்பை KPY யோகி வேடமிட்டு வந்தார். அவர் விஜய் கெட்டப்பிற்கு ரஜினிகாந்தின் விக்கை அணிந்து வந்திருப்பதை பார்த்த பிரியங்கா, விஜய் சார் விக் எங்கடா, நீ அணிந்திருப்பது ரஜினி சார் விக் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மேலும் ராஜு தலைவா விஜய் மாதிரி வரான்னு பார்த்தா தலைவாசல் விஜய் மாதிரி வந்து இருக்கையே என்று கிண்டல் அடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், ரஜினி விஜய் ரசிகர்கள் இதை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Exclusive !
— Dinu | DARK DEVIL (@Dinu_Akshiii) July 31, 2022
Universal Troll material @actorvijay for a reason.
Credits : Hotstar #AK61 pic.twitter.com/ULxcwhX0KA