இந்த காரணத்திற்காக தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றேன்: மனம் திறந்த விஜய் பட நடிகை..!
Author: Vignesh21 January 2023, 6:30 pm
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு தற்போது வரை குறையவில்லை.
அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காதவர் பிரியங்கா சோப்ரா, கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், திரைப்படப் பின்னணியில் இருந்து வராததால், பிரியங்கா சோப்ரா தன்னைத் தானே உருவாக்கிய பெண் என்று வர்ணிக்கிறார். ஜனவரி 2022 இல், பிரியங்கா சோப்ரா தம்பதியருக்கு வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது முதன் முறையாக எதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து பிரியங்கா பேசியுள்ளார்.
இதுகுறித்து பிரியங்கா கூறியதாவது:- ” தனக்கு மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனால் தான் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றதாகவும், தன்னுடைய சிக்கல்களை தெரியாமல் பல பேர் தன்னை தவறாக பேசி வருவதாகவும், ஆனால் அவர்களின் கருத்து தன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும், தன் குழந்தையை பற்றி தவறாக பேசியது தான் தனக்கு மிகவும் வேதனையாக இருப்பதாக மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
40 வயதான பிரியங்கா அவ்வப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்து கொள்ளும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.