தமிழ் படத்தில் அறிமுகமாகி உலக நடிகையாக புகழ் பெற்ற பிரியங்கா சோப்ராவின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
18 July 2023, 11:48 am

இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர்.

தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைராகி வருகிறது. அதாவது, அவரின் முழு சொத்து மதிப்பு ரூ. 559 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர். அவரது கணவர் நிக் ஜோன்ஸின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 171கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…