2002ல் நடிகர் விஜய் நடிப்பில் தமிழன் வெளியான படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து பாலிவுட் பக்கம் சென்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தற்போது முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் நடிகை பிரியங்கா சோப்ரா திகழ்ந்து வருகிறார்.
இதனிடையே, உலக புகழ் பெற்ற பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் இவரைவிட குறைந்த வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டது பல சர்ச்சையாகவும் அந்த சமயத்தில் மாறியது. மேலும், திருமணத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து வாடகைத்தாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்று பிரியங்கா சோப்ரா வளர்த்து வருகிறார்.
இதனிடையே, பாலிவுட்டில் தனக்கு பின் அரசியல் நடப்பதாக தெரிவித்தும், பாலிவுட் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தும் பிரியங்கா சோப்ரா பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், பல நிகழ்ச்சிகளில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கவும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தும் பிரியங்கா சோப்ரா பேசியும் வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடெல் படத்தில் படு மோசமான கவர்ச்சியாகவும் போல்ட்டான பெண்ணாகவும் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஒரு இயக்குனரால் 2002 – 2003 காலக்கட்டத்தில் தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த செயல் வேதனை அளிப்பதாகவும் பகிர்ந்துள்ளார். அப்போது பாலிவுட் படம் ஒன்றில் ரகசிய ஏஜெண்ட் ரோலில் நடித்து இருந்ததாகவும் அதில், ஆண் ஒருவரை வசியம் செய்யும் காட்சி படமாக்கட்டதாவும், அதில் நடிகருடன் நெருக்கமாக நடிக்கவும் ஒப்புக்கொண்டதாகவும், பிரியங்கா சோப்ரா தெரிவித்தார்.
மேலும், அந்த படத்தின் இயக்குனர் தன்னுடைய உள்ளாடையுடன் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், தன்னுடைய ஸ்டைலிஸ்-ஐ அழைத்து ஆடையை கழட்டி உள்ளாடையை காட்டச்சொன்னதாகவும் அதை பார்த்து தான் ரசிகர்கள் ஆசைப்படுவதாகவும் இயக்குனர் கொச்சையாக பேசியதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா உள்ளாடையுடன் நடிக்க மறுத்ததாகவும், 2 நாட்கள் நடித்த நிலையில் உன் படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்து விலகியும் இருக்கிறார். இந்த சம்பவத்தால் அந்த இயக்குனரின் செயல் தனக்கு மனிதாபிமானமற்றதாக தெரிந்ததாகவும், தனது வேதனையை 20 ஆண்டுகள் கழித்து பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.