மனைவி VIRGIN-ஆ இருக்கணும்னு எதிர்பார்க்கக்கூடாது.. பிரபல நடிகை பேச்சால் சர்ச்சை!!
Author: Udayachandran RadhaKrishnan20 December 2024, 6:59 pm
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா சர்ச்சை பேச்சு
பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அங்கேயே செட்டிலாகி கணவன், குழந்தை என இருக்கும் பிரியங்கா தற்போது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆண்கள், தங்களுக்குக் கன்னித்தன்மை வாய்ந்த மனைவி வேண்டும் என்று நினைப்பதைவிட, அவள் சிறந்த குணங்களைக் கொண்டவரா? அவளுடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது? என்பது பார்ப்பது முக்கியம்.
ஏனென்றால், கன்னித்தன்மை ஒரே இரவில் நஷ்டமாகலாம், ஆனால் அவளுடைய குணம் மற்றும் அணுகுமுறை வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கும். என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல சினிமா ரசிகர்கள் அதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் பின்னணி, நீங்கள் ஒரு ஆணிடம் பணம், பொருள் அல்லது வசதி எதிர்பார்க்காமல், அவனுடைய குணம் மற்றும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு அவனை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பல விவாதங்களை கிளப்பி உள்ளது. இதற்கு உங்கள் கருத்தை கமெண்ட் பிரிவில் பகிரலாம்.