ஆத்தாடி.. பிரியங்கா சோப்ரா கழுத்தில் இருக்கும் நெக்லஸின் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Author: Vignesh23 May 2024, 10:53 am
இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா பின்னர் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலிலும் பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
பிரியங்கா சோப்ரா கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். பின்னர், வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றுக்கொண்டனர் பிரியங்கா- நிக் ஜோன்ஸ் தம்பதியினர். தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவில் பெரும் அரசியல் நிலவி வருவதாகவும் தன்னால் இந்தியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாக பேரதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
இந்நிலையில், பிரியங்கா சோப்ரா குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ரோம் நகரில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட போது பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த நெக்லஸ் தான் இப்பொழுது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதாவது, இந்த நெக்லஸில் இருக்கும் ஏழு பெரிய வைரக்கல் 140 கேரட் மற்றும் அலை வடிவில் இருக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட 698 வைரக் கற்கள் மொத்தம் 61.81 கேரட் ஆகும். இந்த நெக்லஸ் இன் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 358 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலையை கேட்டு எல்லோரும் தற்போது ஷாக் ஆகி உள்ளனர்.