கணவரை பிரிய காரணம் இதுதானா? முதல் முறையாக மனம் திறந்து பேசிய VJ பிரியங்கா..!(வீடியோ)
Author: Vignesh6 March 2024, 4:13 pm
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்படி எக்கச்சக்க வரவேற்பை பெற்ற இவர், இந்நிலையில், சமீபத்தில் VJ அர்ச்சனா தன்னுடைய யூடியூப் சேனலில் தொடங்கி இருக்கும் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துக்கொண்டார். அதில், என்னுடைய தம்பிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது. அவள் தான் என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்து இருக்கிறாள். அத்தை என்ற உறவைத்தாண்டி அவள் மீது நிறைய அன்பு வைத்து இருக்கிறேன். அதில், பேசியுள்ள அவர் என்னையும் யாரையாவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் எனக்கு குழந்தை பெத்துக்கணும், அப்படின்னு ரொம்ப ஆசை இருக்கு, என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவை எடுத்து விட்டேன்.
இனிமேல், என்னுடைய லைஃப்ல எடுக்க போற பெரிய முடிவுகளால் அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன். நான் போட்டு வச்சிருக்கிற பிளானை ஒவ்வொரு விஷயத்திலும் நிறைவேற்றி வருகிறேன். ஆரம்பத்தில், நான் பிக் பாஸ்க்கு போகணும் என்று நினைத்தேன். அதேபோல, போய்விட்டேன். கார் வாங்குவது மாடி வீடு கட்டுவது அப்படி ஒவ்வொரு விஷயமாக நான் நினைத்ததை செய்து கொண்டே வருகிறேன்.
இப்ப கொஞ்ச நாளா ஆரோக்கியத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதேபோல, எனக்கும் வயசு ஏறிக்கொண்டே போகுது எனக்கும் ஒரு குழந்தை பெத்துக்கனும் ஆசையா இருக்கு என பிரியங்கா தெரிவித்துள்ளார். மேலும், இப்ப நான் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போ எனக்கு அன்பு மட்டும் கொடுத்தால் போதும் அவர்களுக்கு இரண்டு மடங்கு அன்பை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.