இப்படி ஒரு ஆடையில் முகம் சுளிக்க வைத்த VJ பிரியங்கா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!
Author: Rajesh26 February 2023, 7:30 pm
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மாடர்ன் உடையில் மட்டும் வலம் வருவார்.

தற்போது படுகவர்ச்சியான ஆடையில் உலா வந்துள்ளார். இதன் புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள இவர் கவர்ச்சி ஆடை அணிந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.