சினிமாவில் வருவதற்கு முன் அந்த தொழில் செய்த பிரியங்கா மோகன் – படவாய்ப்பு இப்படிதான் கிடைச்சது!

Author: Rajesh
18 December 2023, 7:12 pm

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

Priyanka Mohan -updatenews360

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Priyanka Mohan -updatenews360

அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.

Priyanka Mohan -updatenews360

பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?