டாப் ஹீரோயின் இடத்தை புடிச்சே ஆகணுமாம்.. 22 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் பண்ண போகும் ப்ரியங்கா மோகன்..!

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 68வது படமான தளபதி 68 குறித்து அறிவிப்புகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது. வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் நடிகர்கள் தேர்வும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை அறிந்த ரசிகர்கள் விஜய் தன்னைவிட 22 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ண போகிறாரா என ஷாக் ஆகி உள்ளனர். ரஜினி 60 வயதில் இருந்த போது ஸ்ரேயா நடிக்கலையா..இதெல்லாம் சினிமாவில் சாதரணம்..மார்கெட் முக்கியம் பிகிலு என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

மேலும், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வரும் சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும், விஜய் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் திரில்லர் வகையில் உருவாகும் என கூறப்படுகிறது. மேலும், இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என படக் குழுவினருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

2 days ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

2 days ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

2 days ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

2 days ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

2 days ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

2 days ago

This website uses cookies.