அவர் கூட ஓரளவுக்கு மேல உடம்பை காட்டி.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா மோகன்..!
Author: Vignesh23 February 2024, 10:50 am
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
தற்போது, இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய கேப்டன் மில்லர் திரைப்படத்தில் வேல்மதி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கவர்ச்சியாக நடிப்பது குறித்த பேசியுள்ளார். அதில், ஹீரோக்களுடன் நடிக்கும் சமயத்தில் வெறும் உடலை காட்டி மட்டும் நடிக்க விருப்பமில்லை. நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கவே தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.