என்னையும் பலமுறை வற்புறுத்தினார்… சிவகார்த்திகேயனின் வீக்னஸை உடைத்த பிரியங்கா மோகன்!
Author: Shree28 October 2023, 12:49 pm
கடந்த சில நாட்களாக சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி. இமானின் சண்டை தான் சினிமாவின் தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. பிரபல இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றிவிட்டதாக. அவர் மிகப்பெரிய துரோகி என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே இல்லை. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று தடாலடியாக கூறினார். இவ்வளவு வெறுப்புக்கு என்ன காரணம் என கேட்டதற்கு… சம்பவத்தை வெளியில் சொல்ல முடியாது. பார்ப்பதற்கு தான் அவர் நல்ல மனிதர் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டே எனக்கு எதிரான வேலைகள் செய்துவந்ததை நான் தாமதமாக தான் புரிந்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தை அடுத்து இருவர் மீதும் சந்தேகித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வீக்கனஸ் விஷயங்களை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். அதாவது, சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும். அதுதான் அவரது வீக்னஸ். படப்பிடிப்பில் கூட அதிகமாக ஸ்வீட் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார். அவர் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் என்னையும் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவார் என பிரியங்கா மோகன் பேட்டியில் கூறியுள்ளார். இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததும் பிரியங்கா மோகனுடன் இவ்வளவு நெருக்கமாக பழகினாரா சிவகார்த்திகேயன் என கொளுத்தி போட்டுள்ளனர்.