டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர், அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.
பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.
இந்நிலையில், டிக் டாக் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். டிக் டாக் படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டு வருகிறார்கள்.
கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில், நடிகை பிரியங்கா மோகன் தனுஷ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார். அதில், தனுஷ் பாடினா பிடிக்குமா? பாடல் வரிகள் பிடிக்குமா? என்றும், புதுப்பேட்டை மாதிரி ஆக்ஷன் படமா? காதல் கொண்டேன் மாதிரி காதல் படமா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளளது. அதற்கு, பிரியங்கா மோகன், தனுஷ் சார் பாடினா இளையராஜா பாடுவது போல் இருக்கும் என்றும், கேப்டன் மில்லர் படம் ஆக்ஷன் படம் தான், தனுஷ் கூட காதல் கொண்டேன் படம் போல் பண்ணனும் என்று தெரிவித்து இருக்கிறார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.