என் வருங்கால கணவர்… ஜெயம் ரவி – பட்டுன்னு போட்டுடைத்த பிரியங்கா மோகன்!

Author:
12 October 2024, 11:43 am

தமிழ் சினிமாவின் தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருந்தது.

Priyanka Mohan

டான் திரைப்படத்தில் இணைந்து மீண்டும் அவருடன் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 கோடியை வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்து. பிரியங்கா மோகன் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்த பிறகு தற்போது ஜெயம் ரவியுடன் பிரதர் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் .

அத்துடன் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வெளியான சரிபோதா சனிவாரம் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தி JFW விருதுவிழாவில் கலந்து கொண்ட JFW Achievers Awards 2024 வாங்கியிருக்கிறார்.

jeyam ravi

அப்போது நடிகை பிரியங்கா மோகனிடம் உங்களுடைய வருங்கால கணவரின் குணங்கள் உங்களுக்கு பிடித்தமான நடிகர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் யார் யாரிடம் என்னென்ன எடுத்துக் கொள்வீர்கள் என கேள்வி கேட்டதற்கு நான் சிவகார்த்திகேயனிடம் இருந்து நகைச்சுவை உணர்வை எடுத்துக் கொள்வேன்.

தனுஷிடமிருந்து கடின உழைப்பை எடுத்துக் கொள்வேன். சூர்யா, ஒரு ஜென்டில்மேன் என்பதால் அதை அவரிடம் என் வாழ்க்கைக்கு எடுத்துக் கொள்வேன். நானி என்னுடைய நண்பர் என்பதால் அவரைப் போல ஒரு நல்ல நண்பர் சிறந்த நண்பர் என் பார்ட்னராக இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன் ஜெயம் ரவி ரொம்ப இனிமையானவர் இரக்கமானவர். அத்துடன் நெல்சன் திலீப்குமார் ரொம்ப காமெடியானவர்.

sivakarthikeyan

இதையும் படியுங்கள்: அஜித்தின் மகளா இது? கிளாமர் தெறிக்க மம்மியுடன் கூல் போஸ் – ஷாலினி வெளியிட்ட வீடியோ!

அத்துடன் திறமையானவர் என்று பிரியங்கா மோகன் தெரிவித்திருந்தார். இப்படி இந்த அத்தனை குணமும் இருக்கும் நபர் என்னுடைய பார்ட்னராக இருக்க வேண்டும் அப்படி இருப்பவர் jfw’விற்கு மெயில் பண்ணுங்க என்று காமெடியாக பிரியங்கா மோகன் தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கலகலப்பான பேச்சு தற்போது இணையத்தில் வைரலாக பிரியங்கா மோகனுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!