அந்த பழக்கத்திற்கு அடிமையான சிவகார்த்திகேயன்.. புட்டு புட்டு வைத்த பிரியங்கா மோகன்..!
Author: Vignesh26 October 2023, 12:00 pm
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது, சிவகார்த்திகேயன் இனிப்பு சாப்பிடுவதற்கு அடிமையாகி விட்டார் என்றும், ஷூட்டிங் சமயத்திலும் இப்படித்தான் எங்களையும் சாப்பிட சொல்லிக் கொடுப்பார் என்று பிரியங்கா மோகன் பலரும் அறிந்திடாத சிவகார்த்திகேயனின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.