பவர் ஸ்டாருக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. படம் வேற Level.. Different-ஆ இருக்கப்போகுதாம்..!

Author: Vignesh
11 April 2023, 2:30 pm

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Priyanka Mohan -updatenews360

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

Priyanka Mohan -updatenews360

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தென்னிந்திய அளவில் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியங்கா மோகன் அடுத்ததாக முன்னணி நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

pawan-kalyan-updatenews360

இந்த படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார் என்றும், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

pawan-kalyan-updatenews360

இந்த படத்தின் மூலம் முதல் முறையாக பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும், பவன் கல்யாண் மற்றும் பிரியங்கா மோகன் சூப்பர் ஜோடி என தெரிவித்து வருகிறார்கள்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 670

    1

    0