வாயிஸ் மெசேஜ் அனுப்பிய அஜித்..- மேடையில் போட்டு காட்டி கெத்து காட்டும் பிரியங்கா..!

Author: Vignesh
1 May 2023, 4:00 pm

‘Comedy is a serious Business’ என்று சொல்லுவாங்க. அந்த காமெடியினால் மற்றவர்களை கிண்டல் செய்து சிரிக்க வைக்கலாம்; கிண்டல் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது Category – க்கு பொருத்தமானவர் Anchor பிரியங்கா. எவ்வளவு கிண்டல் கேலி செய்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஜாலியாக நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல்.

priyanka deshpande - updatenews360

நடிப்பதற்கு, சின்னச் சின்ன வாய்ப்புகள் கூட வந்திருக்கு. ஆனால், அவருக்கு ஆர்வம் இல்லை. சில பேர் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகலாம்னு நினைச்சு வருவாங்க; போயிருக்காங்க. ஆனால், இவருக்கு அந்த ஆசை இல்லை. அது ஏன்னு நமக்கு தெரியலை. சமீபகாலமாக அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது போல ஃபோட்டோ – வா போட்டு தள்ளுறாங்க.

இவருடைய வாழ்வில் மறக்க முடியாத சோகம் என்னவென்றால், இவர் 7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்துள்ளார். இதனால், அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் விமான பணிப்பெண் ஆகியிருப்பாராம்.

சோகத்தை முடித்துவிட்டு விஷயத்திற்கு வருவோம், கடந்த சீசன்களில் பிக் பாஸ்க்கு சென்று இவரின் பெயர் மக்கள் மத்தியல் கொஞ்சம் டேமேஜ் ஆகி இருந்தாலும் அதற்கு பின்னர் வந்த நிகழ்வுகளில் விட்ட இடத்தை பிடித்துள்ளார்.

இதனிடையே, பிரியங்கா இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் இவரின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் கவலையாக தான் இருக்கும். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் start Music என்ற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா.

Priyanka Deshpande-Ipdatenews360 (3)

இந்த ஷோவில் தல அஜித்தை வைத்து இந்த வாரம் போட்டிகள் நடத்தி உள்ளார். அப்போது நடிகர் அஜித் அவருக்கு வாயிஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் அந்த மெசேஜ்களையும் மேடையில் வைத்து அவர் போட்டுக்காட்டி உள்ளார்.

இந்த தகவலை அஜித் தான் உண்மையில் பரபரப்பினாரா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 550

    4

    0