அஜித் பட நடிகை தயிர் சாதமா இவங்க? 20 ஆண்டுகளுக்கு பிறகு Re – Entry!

Author:
29 October 2024, 8:44 pm

கன்னட சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை பிரியங்கா திரிவேதி. கொல்கத்தாவை சொந்த ஊராக கொண்ட இவர் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பெரும் புகழ் பெற்றார்.

priyanka trivedi

ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் மிகவும் பிடித்த பேவரைட் ஹீரோயின்கள் லிஸ்டில் இடம் பிடித்திருந்த நடிகை பிரியங்கா திரிவேதிக்கு தற்போது 46 வயது ஆகிறது. இவர் கன்னட திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான உபேந்திரா என்பவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். உபேந்திரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் கிட்டதட்ட 20 வருடங்களுக்குப் பிறகு நடிகை பிரியங்கா திரிவேதி உக்கிரவதாரம் என்ற ஒரு திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் .

இது திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரியங்கா நான் தமிழில் படம் பண்ணுறது ரொம்பவே ஸ்பெஷலா சந்தோஷமா இருக்கு. எனக்கு தமிழ் மற்றும் தமிழ் மக்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆக்‌ஷன் மற்றும் கமர்சியல் கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.

நிச்சயம் உங்களுடைய சப்போர்ட் எனக்கு தேவை. இன்னும் பல பேர் என்னை பார்த்தால் தயிர்சாதம் என்று என்னை அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மனதில் நான் பதிந்திருப்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. நவம்பர் 1-ம் தேதி இவர் நடித்திருக்கும் உக்கிரவாதம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

priyanka trivedi

நடிகை பிரியங்கா முன்னதாக 2003 ஆம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த காதல் சடுகுடு படத்திலும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார். முன்னதாக 2002 ஆம் ஆண்டு கோலிவுட் சினிமாவில் அறிமுகமான பிரியங்கா அஜித், ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளிவந்த ராஜா திரைப்படத்தில் தயிர் சாதம் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 147

    0

    0