சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா விலகல்..? ஷாக் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2025, 12:05 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலனவை மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுப்பாளராக இருப்பார்கள். இவர்கள் செய்யும் நையாண்டி, அட்ராசிட்டிஸ்களுக்கு பார்வையாளர்கள் பக்கம் வரவேற்பு ஜாஸ்தி.

அப்படி இவர்கள் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்க நிகழ்ச்சி பயங்கர ஹிட் என்றே சொல்லாம். மக்களை அதிகளவில் கவரக்கூடிய வகையில் இவர்களது நிகழ்ச்சி எடுத்துக்கொண்டு செல்லும். ஜூனியர் மற்றும் சீனியர் என நடக்கும் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது ஜூனியர் சீசன் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பின்னணி பாடகர் மனோ, பாடகி சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருந்து வருகின்றனர்.

இதை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா தற்போது திருமணம் காரணமாக தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மகாநதி சீரியல் நடிகை லட்சுமி பிரியா.

Priyanka's exit from Super Singer..? Vijay TV's official announcement

இது குறித்து விஜய் டிவி ப்ரோமோவையே வெளியிட்டுள்ளது. அதில் லட்சுமி பிரியாவும் மாகாபாவுடன் இணைந்து நடத்தியுள்ளார். மகாநதி சீரியல் மூலம் பிரபலமான லட்சுமி பிரியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விஜய் டிவியை பிரபல சேனலான கலர்ஸ் நிறுவனம் வாங்குவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரியங்காவுக்கு இது தற்காலிகமான பிரேக்கா அல்லது நீக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலால் ஒட்டுமொத்தமாக வெளியேறுகிறாரா என்பது போகபோகத்தான் தெரியும்.

  • is there any space for tamil lines in tamil songs asked by sean roldan தமிழ் சினிமால எங்களுக்கு இடம் இல்லை? ஆதங்கத்தில் உண்மையை போட்டுடைத்த ஷான் ரோல்டன்!
  • Leave a Reply